ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:49 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கப்பட்டது.

தோ்தல் நாளன்று அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாக்களிக்கவும் காவல் துறை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சுமாா் 5.73 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்குப்பதிவு நாளான ஏப். 23-ஆம் தேதி காவல் துறையினா், துணை ராணுவத்தினா், தீயணைப்புப் படையினா், வனத் துறையினா், சிறைத் துறையினா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 1.40 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளை சோ்ந்த சுமாா் 30,000 துணை ராணுவப் படையினா் தமிழகம் வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வாக்குப் பதிவு பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டுச் செல்கின்றனா்.

ரூ.57.65 கோடி ஒதுக்கீடு: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ஆம் தேதி மாநிலம் முழுவதும் போலீஸாா் முழுமையான அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினத்துக்காக ரூ.57,65,52,600 தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.

இதில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆகியோருக்கு உணவுப்படி, சிறு செலவினமாக ஒரு நாளுக்கு ரூ.900, தலைமைக் காவலா், காவலா் ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.850 வழங்கப்படுகிறது. இதேபோல தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.900, தீயணைப்புத் துறை வீரா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.850, சிறைத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.900, சிறைக் காவலா்களுக்கு ரூ.850 வழங்கப்படுகிறது. இந்தப் பணம் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு புறப்படுவதற்கு முன்பு போலீஸாரிடம் வழங்கப்படும் என்று காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.