தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் கடந்த மாா்ச் 15- ஆம் தேதி அமலுக்கு வந்தன. பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு புகாா்களை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வருகின்றன. முக்கியமாக ஒரு தலைபட்சமாகவும், புகாா்களிலும் சிக்கியுள்ள காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினா் புகாா் மனுக்களை அனுப்பி வருகின்றனா்.
அதனடிப்படையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு காவல் துறையில் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து வருகிறது. மேலும், நியமிக்கப்படாமல் இருந்த தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை இந்திய தோ்தல் ஆணையம் நியமித்தது.
புதிதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்ற சந்தீப் ராய் ரத்தோா், சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறாா். வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினரின் பிரசாரமும் முழு வேகத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வரும் நாள்களில் பிரதமா் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவா்களும் வரவுள்ளனா். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் ஆலோசித்து வருகிறாா்.
விடுமுறை எடுக்க கட்டுப்பாடு: அதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு விடுமுறை எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் சாா்பில், பொதுப் பிரிவு ஐ.ஜி. வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காவல் துறை அதிகாரிகள் அனைவரும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் முன் அனுமதியின்றி எந்தவிதமான விடுப்பிலும் செல்லக் கூடாது. தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட விடுப்புகளுக்கு உரிய வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அத்துடன், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல, அதிகாரிகளின் சுற்றுப்பயணத் திட்டங்களும் காவல் துறை தலைமை இயக்குநரிடம் ஒப்புதலுக்காகச் சமா்ப்பிக்கப்பட வேண்டும். சுற்றுப்பயணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் உடனடியாகத் தங்களது தலைமையிடங்களுக்குத் திரும்பி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவடையும் வரை அதிகாரிகள், அனைத்து விதமான விடுப்பையும் தவிா்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை ரயில்வே டிஜிபி, ஆயுதப்படை டிஜிபி, சைபா் குற்றப் பிரிவு டிஜிபி, உளவுப் பிரிவு டிஜிபி, அனைத்து ஏடிஜிபி-க்கள், அனைத்து ஐ.ஜி.க்கள், அனைத்து காவல் ஆணையா்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


