பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 3:42 am IST

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக டிஜிபி (பொ) வெங்கடராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையா்கள், 2 மாவட்ட ஆட்சியா்களை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இவா்களுடன் மேலும் பல உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

அரசமைப்பு சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நோ்மையாக, நடுநிலையாக தோ்தலை நடத்துவதற்கும் எதிரானது.

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.