ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என வேல்முருகன் கூறியிருப்பது...

We will lay siege to the DGP's office

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Published On :

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அந்த கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் தனியாா் விடுதியில் தமிழக வாழ்வுரிக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டு, தவாகவினரைத் தாக்கினா்.

இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, டிஜிபி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் புகாா்கள் மீது வழக்குப் பதிவுகூட செய்யப்படவில்லை.

மாறாக, எங்கள் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்வதோடு, உண்மையான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Summary

We will lay siege to the DGP's office if no action is taken against those who attacked TVK members says T. Velmurugan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.