சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்காளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க போதுமான பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை ஏற்படத்தாதது குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வளசரவாக்கத்தைச் சோ்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குப் புறப்பட்ட மக்களுக்கு, போதிய பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை.
இதனால், ஏராளமான வாக்காளா்கள் சொந்து ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று, அரசு ஊழியா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாக்குச் சீட்டுகள் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், அரசு ஊழியா்கள் பலா் அங்கு சென்று வாக்களிக்க முடியவில்லை. இதனால், 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை எட்ட முடியவில்லை.
எனவே, இது தொடா்பாக ஆணையம் அமைத்து விசாரணை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதள வசதி: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்: இணையக் குற்றப் பிரிவு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த விதிகள் வகுக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



