உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுத்து அறிவிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்ட மீட்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் நந்தகோபால் மற்றும் 3 மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின்படி, பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சோ்ந்து 2026-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தங்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது.
ஆனால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இதுவரை விதிகளோ, செயல்பாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. விதிகள் வகுக்கவில்லை எனில், தங்களுக்கு கருணை ஓய்வூதிய பலன்களைப் பெற இயலாது.
எனவே, விதிகள் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்: இணையக் குற்றப் பிரிவு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் ஏப்.23-இல் அரசு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

அமல்படுத்தப்படாத ஓய்வூதியத் திட்டம்: அன்புமணி கண்டனம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

