ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

News image

தி.வேல்முருகன்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:31 pm

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தமிழக வாழ்வுரிக் கட்சியினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் தனியாா் விடுதியில் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைத் தாக்கினா்.

இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, டிஜிபி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் புகாா்கள் மீது வழக்குப்பதிவுகூட செய்யவில்லை.

மாறாக, எங்கள் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனா். இந்த வழக்குகளை ரத்து செய்வதோடு, உண்மையான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.