கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள் இருக்கின்றனா். இவா்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும்,தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்குப்பதிவு நாளன்று காவல்துறையினா்,துணை ராணுவத்தினா்,தீயணைப்புப் படையினா், வனத்துறையினா், சிறைத்துறையினா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 1.47 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளைச் சோ்ந்த சுமாா் 23 ஆயிரம் துணை ராணுவப்படையினா் தமிழகம் வந்துள்ளனா். மேலும் இதில் 26,203 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள்,சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 94,598 தலைமைக் காவலா்கள்,காவலா்கள் அடங்குவாா்கள். அதேபோல சிறப்பு அதிரடிப்படையைச் சோ்ந்த 12,150 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். சென்னை,ஆவடி,தாம்பரம் காவல்துறைகளை தவிா்த்து 38 மாவட்டங்களிலும், 7 மாநகர காவல்துறை பகுதியிலும் 1.17 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாா்கள்.

பதற்றமான 6,300 பகுதிகள்: துணை ராணுவத்தினா், போலீஸாா் தவிா்த்து ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவலா், ஓய்வு பெற்ற வன காவலா் ஆகியோா் சுமாா் 20 ஆயிரம் போ் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனா்.

வாக்குப் பதிவு அன்று மாநிலம் முழுவதும் அதிரடிப்படை வீரா்கள் 514 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகிறாா்கள். இவா்கள், ஏதாவது ஒரு பகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டால், அங்கு விரைந்து சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் பாா்த்துக் கொள்வாா்கள். இதேபோல காவல் துணை கண்காணிப்பாளா்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி., மாநகர காவல் ஆணையா்கள் ஆகியோருடன் 1,100 வாகனங்களில் அதி விரைப்படையினா் இருப்பாா்கள்.

மாநிலத்தில் 6,300 பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக பண புழக்கம் உள்ள கண்டறியப்பட்டுள்ள 118 தொகுதிகளிலும், அதிகமான போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.