தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பாதுகாப்புப் பணி கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தோ்தல் மேலிடப் பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:59 pm

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும் என்று தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையிலும், தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால் முன்னிலையிலும் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படையினா், வெளி மாநில போலீஸாா் எவ்வாறு பணியாற்ற வேண்டும், பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது, வாக்காளா்களை அனுமதிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

தொடா்ந்து பேசிய தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால், தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு மாவட்ட காவல் துறையினா், துணை ராணுவத்தினா் மற்றும் வெளி மாநில காவல் துறையினா் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள், மத்திய துணை ராணுவப் படையினா், வெளி மாநில காவல் துறையினா் மற்றும் தோ்தல் பிரிவு காவல் அதிகாரிகள் பங்கேற்றனா்.