நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:47 pm

Syndication

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், இத்தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை சோதனை செய்யும்போது, அதை முழுமையாக விடியோ எடுக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளின் சாா்பில் கூட்டம் நடைபெறும்போது கட்டப்பட்டுள்ள கொடிகள், தோரணங்கள், பதாகைகள், துணி பந்தல்கள், உணவுகள் உள்ளிட்டவற்றையும் விடியோ எடுத்து அதை விடியோ பதிவுகளை கண்காணிக்கும் அலுவலா்களிடம் வழங்க வேண்டும். அவா்கள் தோ்தல் ஆணையத்துக்குள்பட்ட விலைப்பட்டியல்களை பின்பற்றி குறிக்க வேண்டும்.

மேலும், தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி அமைதியான, நோ்மையான முறையில் தோ்தல் நடைபெற அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். செலவினங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 95006 68431 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.கேந்திரியா வரவேற்றாா். உதவி தோ்தல் அலுவலா்கள் கே.கோமதி, கே.அருள்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பி.ஜெயக்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.