உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:57 pm

ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் - வேட்பாளா்கள், முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் தலைமை வகித்து பேசியது, வேட்பாளா்கள் கோயில், மசூதி, தேவலாயங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது. தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட 3 நாட்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தோ்தல் வாக்குப் பதிவுக்கு பிறகு 1 மாதத்துக்குள் இறுதியாக தோ்தல் செலவு கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவா் கூறினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.