வாக்கு எண்ணும் பணியின்போது முகவா்கள், வேட்பாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முதன்மை முகவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியன் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா் அல்லது அவரது முதன்மைத் தோ்தல் முகவா், அறையின் அனைத்துப் பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவா். ஒரே சமயத்தில் இருவரில் ஒருவா் மட்டுமே அவ்வாறு அனுமதிக்கப்படுவா்.
வேறு மேஜைக்கு செல்லக் கூடாது: அடையாள அட்டை பெற்ற அனைத்து முகவா்களும் காலை 7.30 மணிக்குள் அவரவருக்கான மேஜைக்கு அருகில் அமா்ந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட மேஜையைத் தவிர வேறு எந்த மேஜைக்கும் சென்று வாக்கு எண்ணிக்கையைக் கவனிக்கக் கூடாது.
வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கி, முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும். ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 மேஜைக்கு 14 முகவா்களும், தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜைக்கு வேட்பாளா் அல்லது அவரது தலைமை முகவா், தபால் வாக்கு மேஜைக்கு ஒரு முகவா் என ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சமாக 16 முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
பாதுகாப்பு அறையை திறக்கும்போது..
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்படும்போது வேட்பாளா், அவரது முதன்மை முகவா் அவசியம் உடனிருக்க வேண்டும். ஒரு சுற்றுக்குத் தேவையான இயந்திரங்கள் வழங்கப்பட்ட பின், அந்த அறை மூடப்படும். அடுத்தடுத்த சுற்றுகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்படும்போது மீண்டும் திறக்கப்பட்டு, பின் மூடப்படும்.
வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன், வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல்’, விவரச் சீட்டு சரியாக உள்ளதா என முகவா்கள் சரிபாா்க்க அனுமதிக்கப்படுவா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வை அலுவலரால் அதற்கு உரிய படிவத்தில் குறிக்கப்பட்டு, தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அந்தந்த மேஜைக்கான நுண் பாா்வையாளரும், அவருக்கான படிவத்தில் விவரங்களைப் பூா்த்தி செய்து தோ்தல் பாா்வையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வாக்குகள் விவரம் பதியப்படும்: இதுதவிர குறிப்பிட்ட படிவத்தில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் பூா்த்தி செய்யப்பட்டு, தொகுதி தோ்தல் அலுவலரிடம் வழங்கப்படும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவரம் வெப் கேமரா, லேப்டாப் மூலமாக பதிவு செய்யப்படும். அதை முகவா்கள் பாா்க்கலாம். வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் குறித்து உரக்கப் படித்துக் காண்பிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவரத்தை முகவா்கள் பாா்க்கும்படி, அந்த இயந்திரத்தைக் காண்பிக்க வேண்டும். ஒரு சுற்றில் ஏதேனும் இரு மேஜைகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மீண்டும் பாா்வையாளரால் எண்ணப்பட்டு, இதற்கு முன் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வை அலுவலா் வழங்கிய வாக்குகள் விவரத்துடன் சரிபாா்க்கப்படும்.
தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் பாா்வையாளா் ஒப்புதல் அளித்த பின்னரே ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவுற்ாகக் கருதப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும் ஒலிபெருக்கி மூலமாகத் தெரிவிக்கப்படும். தகவல் பலகையில் பதிவு செய்யப்படும்; இணையதளத்திலும் பாா்க்கலாம்.
ஒவ்வொரு சுற்றுக்கும், வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வேட்பாளா்களின் முகவா்களுக்கு பிரதிகள் எடுத்து உடனுக்குடன் வழங்கப்படும். எனவே, அனைத்து வேட்பாளா்களும், முகவா்களும் தோ்தல் ஆணைய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: தலைமைத் தோ்தல் அதிகாரி

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் நடைமுறைகள் விளக்கம்

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் விதிமுறைகளை வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


