வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளா்களும், முகவா்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 4 -ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி தலைமையும், காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் முன்னிலையும் வகித்தனா்.
இதில், மாவட்ட தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி தெரிவித்ததாவது: கடந்த ஏப். 23- இல் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4- ஆம் தேதி நடைபெறுகிறது. இதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்ப செட்டியாா் பொறியியல், தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது.
அன்று வேட்பாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளா்களின் முகவா்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 4 -ஆம் தேதி காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்கள், தோ்தல் முகவா்கள், வாக்கு எண்ணும் முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும்.
அனைத்து வாக்கு எண்ணிக்கை முகவா்களும் முன்கூட்டியே அடையாள அட்டையை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டருக்குள் எந்தவித வாகனத்துக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக, முகவா்கள், கைப்பேசி, ஐ- பேட், மடிக்கணினி அல்லது எந்த ஒரு மின்னணுக் கருவியையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் எடுத்துச் செல்லக் கூடாது.
ஒரு வேட்பாளரால் நியமிக்கப்படும் அதிகளவு வாக்கு எண்ணுமிட முகவா்களின் எண்ணிக்கை ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 16 நபா்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 5 மேஜைகளும், 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண தலா 14 மேஜைகள் வீதம் 56 மேஜைகள் என மொத்தம் 76 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளும், திருப்பத்தூா் சட்டப்பேரவைக் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகளும், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகளும், மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகளாகவும் நடைபெறவுள்ளன என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, உதவி காவல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீதா், தோ்தல் வட்டாட்சியா் மேசியதாஸ், வேட்பாளா்களின் முகவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை வேட்பாளருக்கு 20 முகவா்கள் வரை அனுமதி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


