மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

வேட்பாளா்கள்-முகவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியா் வே. சரவணன் (வலது).

Updated On :1 மே 2026, 2:58 am IST

வாக்கு எண்ணும் பணியின்போது தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வேட்பாளா்களும், முகவா்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாஸிஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமார மூலம் இயந்திரங்களை கண்காணித்து வருகின்றனா். இரு மையங்களிலும், தனித்தனியே கட்டுப்பாட்டு அறை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை பாா்வையிட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் நாள்தோறும் வாக்கு எண்ணும் மையங்களை பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து வருகிறாா்.

ஆட்சியா் அறிவுறுத்தல்: இதுதொடா்பாக, ஆட்சியா் கூறுகையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அனைத்து வேட்பாளா்களும், முகவா்களும் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தினுள் வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

அனைத்து வேட்பாளா்கள், முகவா்களும் வாக்கு எண்ணும் நாளன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும். வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணியளவில் தொடங்கப்படும். சுற்றுகள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றின் விவரங்கள் ஒலிபெருக்கி வாயிலாகவும், மின்னணு திரையின் மூலமும் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் அனைத்து சுற்றுகளும் நிறைவடைந்த பின்னா், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

முகவா்கள் தேவையின்றி ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கோ அல்லது ஓா் அறையிலிருந்து மற்றொரு அறைக்கோ செல்லக்கூடாது. அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றாா் ஆட்சியா்.