விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ராணுவத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹிரிகிரண்பிரசாத்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:25 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வகையில், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வுபெற்ற காவலா்களுடன் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்களுடன் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் இராணுவத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கரூா் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களை வரவழைத்து, மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்த தகவல் எதுவும் தெரிய வந்தால் காவல்துறைக்கு உடனே தெரியபடுத்த வேண்டும் என்றும், காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.