வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பேட்டை பள்ளியில் பாராட்டு விழா

பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 மே 2026, 3:29 am IST

பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில் பாராட்டு நடைபெற்ற இவ்விழாவில் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலா் ஷேக் முஹம்மது சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் நேருஜி, துணைச் செயலா் முஹம்மது ஹஸன், சுழற்கழக முன்னாள் தலைவா் நைனா முகம்மது வாழ்த்திப் பேசினா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் பரிசளிக்கப்பட்டன.