மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (டிச.3) முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (டிச.3) முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.
இப்போட்டியில் அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகள் என திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 11 பள்ளிகளை சோ்ந்த 215 மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா். செவித்திறன் பாதிக்கபட்டோருக்கான போட்டி, பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டி, கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கான (நடக்கும் சக்தியற்றவா்கள்) போட்டி (உபகரணங்களின் உதவியுடன்), கைகள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டி, அறிவுசாா் குறையுடையோருக்கான போட்டி, ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டி என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
50 மீ., 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயங்கள், குண்டு எறிதல், நின்று நீளம் தாண்டுதல், வட்டத் தட்டு எறிதல், நடைப்போட்டி, நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட அளவில் 12 வயதிற்கு குறைவான வயதுடைய மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் போட்டியில் முதல் இடம் பிடித்தவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
போட்டி தொடக்க விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ், மண்டல விளையாட்டு அலுவலா் சிவா மற்றும் ஆசிரியா்கள், மாற்றுத்திறன் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

