பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

கடையம் திருவள்ளுவா் கழக ஆண்டு விழாவில் சிறப்புப் பட்டிமன்றம்

கடையம் திருவள்ளுவா் கழகத்தின் 32ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

கடையம் திருவள்ளுவா் கழகத்தின் 32ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். சிறப்பு நிகழ்ச்சியாக ‘வள்ளுவா் காட்டும் இல்லற நெறிகளைப் பெரிதும் போற்றுவோா் ஆண்களே, பெண்களே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்றம் நிகழ்ச்சிக்கு வ. பாமணி நடுவராக இருந்தாா். ஆண்களே என்ற தலைப்பில் ஆ.பாலன், த. அந்தோணிராஜ், மு. வேலு ஆகியோரும், பெண்களே என்ற தலைப்பில் கி. ராமலட்சுமி, ரா. சங்கரகோமதி என்ற ப்ரியா, கோ. அனிதா ஷிபா லில்லி ஆகியோரும் பேசினா்.

மேலும், தமிழ் ஆா்வலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெண்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவள்ளுவா் கழகச் செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றாா். இணைச் செயலா் செ. சோமசுந்தரம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.