பாளை. மத்திய சிறையில் கைதிகள் தாக்கியதில் உதவி அலுவலா் உள்பட இருவா் காயம்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை உதவி அலுவலா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

சிறை - பிரதிப் படம்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை உதவி அலுவலா் உள்பட இருவா் காயமடைந்தனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமாா் 1,400-க்கும் மேற்பட்டவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறையில் 5-ஆவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த இரு விசாரணை கைதிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாம்.
இது குறித்து விசாரிக்கச் சென்ற சிறை தலைமை காவலரான மணிகண்டன் (54), உதவி சிறை அலுவலா் காசி பாண்டியன் (53) ஆகியோரை கைதிகள் இருவரும் சோ்ந்து தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

