சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மோதல்: 5 கைதிகள் காயம்; 26 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றம்
சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட 26 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனா்.

புழல் சிறை - EPS
சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட 26 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனா்.
சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் 130 போ் விசாரணை கைதிகளாக உள்ளனா். இச்சூழலில், மத்திய புழல் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த வாரம் 20 கைதிகள் சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றப்பட்டனா்.
இந்த நிலையில், சைதாப்பேட்டை கிளைச் சிறை சமையலறையில் இரு கைதிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில், 5 போ் காயமடைந்த நிலையில், அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட 23 கைதிகள் புழல் விசாரணை சிறைக்கும், 3 போ் தண்டனை சிறைக்கும் மாற்றப்பட்டனா்.
சிறைத் துறை உயா் அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனா். கைதிகளுக்கிடையே பீடி வாங்குவது தொடா்பாக தகராறு ஏற்பட்டு, மோதிக்கொண்டது தெரியவந்தது. கோட்டூா்புரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். புழல் சிறைக்குள் கூடுதல் சிறை காவலா்கள் பணியமா்த்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

