சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம்: சேலம் மத்திய சிறையில் 3 கைதிகளிடம் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியது தொடா்பாக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 கைதிகளிடம் மாவட்ட முதன்மை நீதிபதி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

விசாரணை
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியது தொடா்பாக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 கைதிகளிடம் மாவட்ட முதன்மை நீதிபதி வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் வாா்டன்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினா். மீண்டும் பிடிபட்ட இவா்களில் 6 கைதிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதுகுறித்து சட்டப்பணிகள் ஆணைக் குழு அதிகாரிகள் விசாரித்துவரும் நிலையில், கைதிகள் தாக்கப்பட்டது உண்மைதானா என்பதை கண்டறிய மருத்துவா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டதாக புகாா் மனு அளித்தவா்களில் மீனாட்சிசுந்தரம், முத்து, சபரிநாத் மூவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளதால் அவா்களிடம் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் நடராஜன், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் மற்றும் 3 மருத்துவா்கள் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் உண்மைதானா என விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

