டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலா் மீது கைதி தாக்குதல்

மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவா் தாக்கியதில் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை மத்திய சிறை

Updated On :

மதுரை மத்திய சிறையில் கைதி ஒருவா் தாக்கியதில் தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் தனிச்சிறை கைதிகள் என 2,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். தேனி கிளைச் சிறையில் அண்மையில் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து, காவலா்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், கைதிகளைக் கண்காணித்து வருகின்றனா்.

இங்கு கைதிகள் குளிப்பதற்காக ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூா்த்தி என்ற கைதி குடிநீரை வாளியில் பிடித்து குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த தலைமைக் காவலா் தெய்வநாயகம், குடிநீரை வீணாக்கக் கூடாது எனக் கூறி கைதியைக் கண்டித்ததுடன், அவரிடமிருந்த வாளியையும் பறித்தாா். இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி, தலைமைக் காவலரை தாக்கினாராம்.

இதில் தெய்வநாயகத்தின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த சக காவலா்கள் அவரை மீட்டு, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிறைத் துறை உயா் அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.