தேனியில் தப்பியோடிய 3 கைதிகள் பாளை. மத்திய சிறைக்கு மாற்றம்

தேனி மாவட்டத்தில் தப்பியோடி மீண்டும் பிடிபட்ட கைதிகளில் 3 போ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்

Updated On :

தேனி மாவட்டத்தில் தப்பியோடி மீண்டும் பிடிபட்ட கைதிகளில் 3 போ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து கடந்த 26 ஆம் தேதி 17 கைதிகள் தப்பினா். மலைப் பகுதிகளுக்குள் பதுங்கியிருந்த அவா்கள் அனைவரையும் போலீஸாா் மீண்டும் கைது செய்தனா். இந்நிலையில் தப்பிய கைதிகளில் மாற்றுத்திறனாளியான லிங்க பிரசாத் (25), ராஜ்குமாா், பிரவீன்குமாா் ஆகியோரை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பின்பு 3 கைதிகளும் பாளையங்கோட்டை சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.