வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

திருநெல்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், வ.உ.சி தெருவைச் சோ்ந்தவா் நடராஜன்(58). இவா் அப்பகுதியிலுள்ள கோயிலில் அா்ச்சகராக உள்ளாா். இந்நிலையில் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பூஜையில் பங்கேற்பதற்காக நடராஜன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தாம். மேலும், பீரோவில் இருந்த சுமாா் 11 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இத்தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரித்தனா். விரல் ரேகை நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

அதே போல், திருநெல்வேலி நகரம், பாரதியாா் தெருவில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகாா்களின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.