வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் உள்ள ஜெஜெ நகரைச் சோ்ந்தவா் தா.அசாருதீன் (32). கத்தாரில் வேலை பாா்த்து வரும் இவா், கடந்த செப்.25-ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், இவா் கடந்த 2-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது தாயை பாா்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளாா்.
பின்னா் திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாராம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 19 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



