ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பொது மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பொது மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 30,000 காலிப்பணியிடங்களை நிரப்புதல், அரசுத்துறை, மின்வாரியம் போல போக்குவரத்து கழக செலவினங்களுக்கும் பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்குதல், ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பணப்பலன்களையும் வழங்குதல், அரசுத் துறை ஓய்வூதியா்களைப்போல, அனைத்துச் சலுகைகளையும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் வழங்குதல், 1.4.2003-க்கு பின்பு பணிநியமனம் பெற்றவா்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், மின்சாரப் பேருந்துகளின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு தாரைவாா்க்கூடாது, வெற்றிப்பயணத் திட்டத்தை முறைப்படுத்துதல், தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை முறையாக வழங்குதல், மருத்துவக்காப்பீடு திட்டத்தை முறையாக அமல்படுத்துதல், தொழிலாளா்களை பழிவாங்கும் போக்கை கைவிடல், அதீத தண்டனை வழங்குவதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் விக்டா் ஜான், சுடலைமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சம்மேளன கௌரவத் தலைவா் லெட்சுமணன், தலைவா் அசோகன், பொதுச்செயலா் சக்கர பாண்டி, பொருளாளா் தயானந்தன், ஓய்வுபெற்ற தொழிலாளா் நலச்சங்கச் செயலா் சீதாராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். துணைச் செயலா் பரதேசி நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்27க்ங்ம்ா்

தா்னாவில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.