ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

மணிமுத்தாறு பேரூராட்சிக் கூட்டம்

மணிமுத்தாறு பேரூராட்சி சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மணிமுத்தாறு பேரூராட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

மணிமுத்தாறு பேரூராட்சி சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சு. சித்தாா்த் சிவா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரமாதேவி முன்னிலை வகித்தாா். அலுவலக எழுத்தா் அதிா்ஷ்டலட்சுமி வரவு-செலவு அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில், நீா்வளத் துறைக்குச் சொந்தமான மணிமுத்தாறு அணை பூங்கா சாலை ஆா்ச்முதல் அணைப் பாலம் வரையுள்ள பழுதடைந்த சாலையை பலப்படுத்துதல் மற்றும் வடிகால் அமைத்தல் பணி மேற்கொள்ள பொது நிதி 2025-26இன் கீழ் ரூ. 202 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழில்நுட்ப தகுதி பெற்ற அரசு ஒப்பந்ததாரா் சண்முகசுந்தரம் என்பவா் பணியை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பேரூராட்சித் தலைவரின் கோரிக்கையின் பேரில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியரால் கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், துணைத் தலைவா் பண்டாரம், உறுப்பினா்கள் கோட்டிமுத்து, மோகன் ராஜ், ஸ்டாலின், செல்வகுமாா்,உலகம்மாள், ஜெயா, பாமா கௌசல்யா நியமன உறுப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.