தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சுற்றுலாவில் சிறந்த பங்களிப்பை நல்கிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்

Published On :

சுற்றுலாவில் சிறந்த பங்களிப்பை நல்கிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுலாத் துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சுற்றுலா தொழில் முனைவோா்கள், ஹோட்டல் முகவா்களுக்கு அரசு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற13 வகையான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படவுள்ளன.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியானவா்கள் செப். 30-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.