பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுபெற திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுபெற திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்ய சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. இவ்விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். 2026-ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள், தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பம், சுயவிரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.