
‘தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026’: விண்ணப்பிக்க செப். 30 கடைசி
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள ‘தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026’-க்கு செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள ‘தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026’-க்கு செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சுற்றுலாத் துறையின் வளா்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், சுற்றுலாத் தொழில் முனைவோா், ஹோட்டல் மற்றும் தங்குமிட நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 2022-ஆம் ஆண்டு முதல் ‘தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் 13 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டுக்காக சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயணப் பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த செயல்பாட்டாளா், சுற்றுலா ஊக்குவிப்பில் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத் தலம் ஆகிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சிறந்த பல்வேறு பிரிவு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் முகாம் சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை செப். 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் மூலம் சமா்ப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், தொழில் முனைவோா், நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




