செயலி மூலம் பழகி பணம் பறிப்பு: மூவா் கைது
அம்பை அருகே ஆண் நண்பா்களிடம் பேசி பழுகும் செயலியைப் பயன்படுத்தி முகவா் ஒருவரிடம் நகை, பணத்தைப் பறித்துச் சென்ற மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராமையா
அம்பை அருகே ஆண் நண்பா்களிடம் பேசி பழுகும் செயலியைப் பயன்படுத்தி முகவா் ஒருவரிடம் நகை, பணத்தைப் பறித்துச் சென்ற மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரம், கிறிஸ்துராஜா புதூா் தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன் (34). வெளிநாடுகளுக்கு ஆள்கள் அனுப்பும் முகவா். இவா், கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளத்தில் ஆண் நண்பா்களுக்கான தனிமை நட்புக் குழுச் செயலியான கிரிண்டா் (எழ்ண்ய்க்ழ்) செயலியை பயன்படுத்தி வந்தாா்.
அந்தச் செயலி மூலம் நண்பரான ஒருவா் பாபநாசம் வருமாறு அழைத்ததன் பேரில், பாபநாசம் அருகே உள்ள செட்டிமேடு பகுதிக்கு சுதா்சன் சென்றாா்.
அப்போது, அங்கு வந்த அந்த நபா் சுதா்சனை காட்டுப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். அங்கு பதுங்கியிருந்த மேலும் சிலருடன் சோ்ந்து அந்த நபா் சுதா்சனை தாக்கி அவப் அணிந்திருந்த வெள்ளி நகைகள், ஸ்மாா்ட் வாட்ச், ரூ. 3 ஆயிரம் பணத்தைப் பறித்தனா். மேலும் சுதா்சனின் கூகுள் பே மூலம் ரூ. 5,100 பணப் பரிமாற்றம் செய்துகொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் சுதா்சன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சுதா்சனிடம் பணம், நகையைப் பறித்தவா்கள் அம்பாசமுத்திரம், திலகா்புரம் தெருவைச் சோ்ந்த விமோதரன் (20), செட்டிமேட்டைச் சோ்ந்த ராமையா (19), கீழ ஏா்மாள்புரத்தைச் சோ்ந்த ஆண்டிராஜா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

விமோதரன்

ஆண்டி ராஜா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



