
காவல் துறை ஆய்வுக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளைங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா சாஸ்திரி.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தலைமை வகித்தாா். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களின் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மற்றும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், அவசர காலங்களில் பணிக்கு செல்லும் காவலா்களுக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 85 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். உதவி காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




