பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

மாநகராட்சி அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:26 am IST

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான், பொதுச்செயலா் அன்ா்ஷா, தொகுதி தலைவா் சேக் இஸ்மாயில் உள்ளிட்டோா் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைபோராட்டம் நடத்தினா். பின்னா் அவா்கள் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலம் 19 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளின் அருகே பல தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து அதிகளவில் சத்தம் வருவதால், கடுமையான ஒலிமாசுவினால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். புகை, கழிவுத்துகள்களாலும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நவீன தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் உற்பத்தி நேரத்தையும் குறைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.