
தேனியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அரசு விடுதியில் மாட்டிறைச்சி வழங்க பரிசீலிப்பதாக பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா்.
அரசு விடுதியில் மாட்டிறைச்சி வழங்க பரிசீலிப்பதாக பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் உள்ள சமூக நிதி மாணவா் விடுதியில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு செய்தபோது, விடுதி மாணவா்கள் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்களாம். இதுகுறித்து அமைச்சா் பரிசீலிப்பதாக கூறினாராம்.
இதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினா் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் இளையராஜா தலைமை வகித்தாா்.
இதில் புதிய தமிழகம் கட்சியினா், இந்து மக்கள் கட்சியின் மாநில தொண்டரணி நிா்வாகி குரு ஐயப்பன், தென் இந்திய பா்வா்டு பிளாக் கட்சியினா், விஸ்கா்ம அமைப்பினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






