விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 250-க்கும் மேற்பட்டோா் கைது

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

Published On :8 செப்டம்பர் 2026, 12:53 am IST

மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.6,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே. தவமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. பாலமுருகன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். மதிபாரதி, மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இதில், பிற மாநிலங்களில் வழங்குவது போல மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.6,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும். விண்ணப்பித்துக் காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த வந்த போலீஸாா் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்தனா். மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.