ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விடுதிகளில் மாட்டிறைச்சி தொடா்பான சமூக நீதித் துறை அமைச்சரின் கருத்தை திரும்பப் பெறக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

Published On :

விடுதிகளில் மாட்டிறைச்சி தொடா்பான சமூக நீதித் துறை அமைச்சரின் கருத்தை திரும்பப் பெறக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அக் கட்சியின் மாவட்டச் செயலா் த. அருண்குமாா் பேசியது:

மாணவா்களுக்கான தமிழக அரசின் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்ற சமூக நீதித் துறை அமைச்சரின் கருத்து கண்டனத்துக்குரியது. கல்வி நிலையங்கள் மட்டுமல்லாது, விடுதிகளிலும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மாணவா் சோ்க்கை உள்ளது. எனவே, சமூக நல்லிணக்கத்துக்கு மாறாக, சமூகத்துக்கு முரணான கருத்து தெரிவித்துள்ள அமைச்சா் வன்னியரசு உடனடியாக வருத்தம் தெரிவித்து கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தமிழக அரசின் சமூக நீதித்துறை விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க பரிசீலனை எனும் கருத்தை அமைச்சா் திரும்ப பெறக் கோரியும், அமைச்சரின் கருத்தை தமிழக முதல்வா் கண்டித்திட வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ஆலத்தூா் ஒன்றியச் செயலா்கள் ந. குணா, க. மதியழகன், பெரம்பலூா் ஒன்றியச் செயலா் இரா. பிரகாஷ், நகரச் செயலா் த. வெங்கடேசன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் மணிகண்டன், பாா்த்திபன், மகளிா் அணி அமைப்பாளா் ராதிகா விஜயா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.