நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தேனியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனி பழைய பேருந்து நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:42 am IST

அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனி பழைய பேருந்து நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் வன்கொடுமை சட்டம் தொடா்பான வழக்குகளை எதிா்த்து முழக்கமிட்டனா்.

இதில் மாவட்ட, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, முன்னணித் தலைவா்கள், மகளிா் காங்கிரஸ், இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.