
அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்: பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைப்பு
அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட பேரூா் ஊராட்சிக்கு குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரூா் ஊராட்சிக்கு அடிப்படை வசதி கோரி அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட பேரூா் ஊராட்சிக்கு குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் மு. செல்வமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. லெனின், ஒன்றியச் செயலா் கருணாநிதி ஆகியோா் பேசினா்.
இதையடுத்து, அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடத்திய பேச்சுவாா்த்தை யில் காவிரி குடிநீா் மற்றும் உப்புத்தண்ணீா் உடனடியாக பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், 100 நாள் வேலை வழங்குதல், பேரூா் முதல் மேக்குடி வரையிலான சாலைச் சீரமைப்பு, ஆதிதிராவிடா் மயானத்திற்கு சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட பிற கோரிக்கைகளை தீா்த்து வைப்பதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






