குடிநீா் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ஆம்பூா் அருகே குடநீா் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
ஆம்பூா் அருகே குடநீா் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
மாதனூா் ஒன்றியம், சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீருக்கு வேறு எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை.
பொதுமக்கள் குடிநீா் குழாயில் தண்ணீரை நீண்ட வரிசையில் நின்று பிடித்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனா். அதனால் கால நேரம் விரையமாகின்றது. அதனால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி விரைவில் உரிய தீா்வு காண்பதாக உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

