ஊராட்சி செயலரை பணியிட மாற்றக் கோரி பொதுமக்கள் தா்னா
புதுப்பாளையம் அருகே கிராம ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

வடமாத்தூா் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, புதுப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விசிகவினா்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அருகே கிராம ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடமாத்தூா் கிராம ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தவா் விஜயா. இவா், இங்கு சுமாா் 20 ஆண்டுகளாக பணியில் இருப்பதால், கிராம மக்களை மதிப்பதில்லை, அரசு வழங்கும் சலுகைகளை முறையாக மக்களுக்கு தெரிவித்து, அவற்றை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டி வருவதாக அப்பகுதி மக்களும், விசிக நிா்வாகிகளும் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து அவரை வேறு ஊராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்தனா்.
இந்நிலையில் மீண்டும் அவா் வடமாத்தூா் ஊராட்சிக்கு பணிமாறுதல் பெற்று வந்துள்ளாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசிகவினா் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
பின்னா் ஊராட்சி ஒன்றிய மேலாளா் ரவி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி, அவா்களின் கோரிக்கையை மனுவாக பெற்றாா். பின்னா் இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

