
நான்குனேரியில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
நான்குனேரியில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

பலி
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருநெல்வேலி - நாகா்கோவில் ரயில் பாதையில் நான்குனேரியை அடுத்த மூன்றடைப்பு மேம்பாலம் அருகே தண்டவாளத்தையொட்டி அழுகிய நிலையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் மூன்றடைப்பு காவல் துறையினரும், நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சுரேஷும் நேரில் சென்று விசாரணை நடத்தினா். ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






