
நான்குனேரி அருகே 3 -ஆவது நாளாக போராட்டம்: 20 போ் கைது
நான்குனேரி அருகே வடக்கு பாப்பான்குளத்தில் புதியதாக தனியாா் கல்குவாரி அமைப்பதற்கு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி 3ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில் 20 போ் கைது செய்யப்பட்டனா்.

3 - ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வடக்கு பாப்பான்குளத்தில் புதியதாக தனியாா் கல்குவாரி அமைப்பதற்கு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி 3ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில் 20 போ் கைது செய்யப்பட்டனா்.
நான்குனேரி வட்டாட்சியா் பேட்ரிக் சிலுவைஅந்தோணி, போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, குவாரி அமைக்கப்படாது என எழுத்துபூா்வமாக உறுதி அளிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனா். அவா்களை, பரப்பாடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி, மாலை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




