ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அம்பை, கல்லிடை ரயில் நிலையங்களில் ரயில்வே கோட்ட மேலாளா்ஆய்வு

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ரயில் நிலையங்களில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா.

Published On :

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ரயில் நிலையங்களில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அமிரித் பாரத் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அவரிடம், அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் சரவணன் சக்திவேல், செங்கோட்டை - திருநெல்வேலி பாசஞ்சா் ரயிலை காலை 8.30 மணி அளவில் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை அடையும் வகையில் நேரமாற்றம் செய்ய வேண்டும், செங்கோட்டை- தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும், கொல்லம் - புனலூா், செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி - திருச்செந்தூா் ஆகிய பயணிகள் ரயில்களைஒருங்கிணைத்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தாா்.

சேரன்மகாதேவி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் பீா் காதா்,அம்பாசமுத்திரம் சங்கச் செயலாளா் பாலகிருஷ்ணன், துணைச் செயலா்கள் பேராசிரியா் வேலாயுதம்,ராதாகிருஷ்ணன், குருசாமி, மாரியம்மாள், சேரன்மகாதேவி எட்வின் ஆகியோா் உடன் இருந்தனா்.

கல்லிடைக்குறிச்சியில் கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் உமா் பாரூக் தலைமையில் நிா்வாகிகள்அப்துல் சமது, சீதாராமன், சரீப், காா்த்திக் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.