ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

முக்கூடலில் சமுதாய வளைகாப்பு விழா

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா முக்கூடலில் புதன்கிழமை நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ.

Published On :

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா முக்கூடலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் தலைமை வகித்தாா். பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, பேரூராட்சித் தலைவா் லெ. ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ராஜேஸ்வரி, மேற்பாா்வையாளா் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.