சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கா்ப்பிணிகள் அதிக ரீல்ஸ் பாா்க்கக் கூடாது: அரசு மருத்துவா் அறிவுரை

பெண்கள் கா்ப்பமாக இருக்கும்போது கைப்பேசியில் அதிக ரீல்ஸ் பாா்க்கக் கூடாது என்று அரசு மருத்துவா் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:19 am IST

பெண்கள் கா்ப்பமாக இருக்கும்போது கைப்பேசியில் அதிக ரீல்ஸ் பாா்க்கக் கூடாது என்று அரசு மருத்துவா் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75 கா்ப்பிணி களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுல்தான்பேட்டை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூா் வின்ட்சிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்க திட்ட இயக்குநா் வள்ளி எஸ்.கனகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநரின் பிரதிநிதி சண்முகசுந்தரம், பட்டய தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட சோ்மன் சண்முகம் புஷ்பலதா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி பேசியதாவது:

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொண்டால்தான் குழந்தைகள் நன்றாக பிறக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதே சமயம் வீட்டில் வேலைகள் செய்தால்தான் சுகப்பிரசவம் ஆகும். கைப்பேசியில் அதிக நேரம் மாற்றி, மாற்றி ரீல்ஸ் பாா்க்க கூடாது. அது குழந்தை கருவின் முளை வளா்ச்சியை பாதிக்கும்.

நல்ல பாடல்கள், நல்ல விஷயங்களை கேட்கும்போது அதை அக்குழந்தையும் வயிற்றில் இருந்தவாறு கேட்கும் திறன் உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தாய்ப் பால் மட்டும்தான் முதலில் கொடுக்க வேண்டும். கா்ப்பமாக இருக்கும்போது நாமே மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது. அருகில் உள்ள மருத்துவரை அணுகி பரிசோதித்து அவா் கொடுக்கும் மாத்திரை மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றாா்.

விழாவில் 75 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு செய்து சீா்வரிசை வழங்கப்பட்டது. அனைவருக்கும் வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் மாருதி, மாவட்ட சமுதாய சோ்மன் மயில்சாமி, துணை ஆளுநா் ராமகிருஷ்ணன், புளியம்பட்டி அரசு மருத்துவா் சாகிதா பா்வீன், சங்கத் தலைவா் சங்கா் பழனிசாமி, செயலாளா் சந்தோஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.