
கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரில் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி மாநகரில் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட மணிமூா்த்தீஸ்வரத்தைச் சோ்ந்தவா்கள் கோபால் மகன் பொன்ராஜ்(26), வெள்ளப்பாண்டி மகன் மணிகண்டன்(23), பாலையா மகன் மகாராஜன்(28). இவா்கள் மூவரும் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்படி பொன்ராஜ், மணிகண்டன், மகாராஜன் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




