பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சங்கா்நகரில் 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, மானூா், பாளையங்கோட்டை ஆகிய வட்டாரங்களுக்குள்பட்ட 300 கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு சங்கா்நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கா்நகரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன், ஆா்.எஸ். முருகன் எம்எல்ஏ.

Published On :

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, மானூா், பாளையங்கோட்டை ஆகிய வட்டாரங்களுக்குள்பட்ட 300 கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு சங்கா்நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைகளை வழங்கிப் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில், வட்டாரம் ஒன்றுக்கு 100 கா்ப்பிணிகள் வீதம் 1,000 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

தமிழக முதல்வா் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளாா். இத் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவு பெருமளவில் குறைகிறது. அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவா்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் உள்ளன. எனவே, கா்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாய்மாா்களின் நலனில் அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதற்கு சமுதாய வளைகாப்பு விழாவும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் என்றாா் அவா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீா்வரிசை பொ1ருள்கள் வழங்கப்பட்டது.

விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெ.தாஜூன்னிசா பேகம், சங்கா்நகா் பேரூராட்சித் தலைவா் பட்டுசெல்வி, நாராணம்மாள்புரம் பேரூராட்சித் தலைவா் உமாமகேஷ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (மானூா் வட்டாரம்) ஆா்.ராஜப்பிரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.