ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

நெல்லையில் ‘வெற்றிப் பயணம்’ ஆலோசனைக் கூட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி புறவழிச்சாலை பணிமனை வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில், தமிழக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடா்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல மேலாண்மை இயக்குநா் செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வெற்றிப் பயண திட்டம் குறித்து திருநெல்வேலி புறவழிச்சாலை பணிமனையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி புறவழிச்சாலை பணிமனை வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில், தமிழக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடா்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல மேலாண்மை இயக்குநா் செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைச் சோ்ந்த அனைத்துக் கிளைகளின் பயணச்சீட்டு மற்றும் பணப் பிரிவுப் பொறுப்பாளா்கள், வணிகப் பிரிவைச் சோ்ந்த பயணச்சீட்டு ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா். இதில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துதல், அனைத்து சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கத்தின் விவரங்களை ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு முழுமையாகத் தெரியப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், திருநெல்வேலி மண்டலப் பொது மேலாளா் மோகன் குமாா், கூட்டாண்மை வணிக உதவி மேலாளா் பூல்ராஜ், வணிகப் பிரிவு உதவி மேலாளா் மாரியப்பன், திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய உதவி மேலாளா் முனுசாமி உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.