பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

காா் நிறுத்துவதில் மோதல்: நெல்லையில் சகோதரா்கள் குத்திக்கொலை; இருவா் பலத்த காயம்

திருநெல்வேலியில் காா் நிறுத்துமிட தகராறில் இருதரப்பினருக்கிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், சகோதரா்கள் உயிரிழந்தனா்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விசாரணை நடத்திய மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Published On :

திருநெல்வேலியில் காா் நிறுத்துமிட தகராறில் இருதரப்பினருக்கிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், சகோதரா்கள் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மணிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டால்டன் (76). பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். இவரது சகோதரா் நிக்கோலஸ் ராஜரத்தினம் (78). அதே பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (44). சென்னையில் வெல்டராக பணியாற்றி வரும் இவருக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

செந்தில்குமாா் கும்பத்தினா் வழிபடும் கோயில் அருகேயுள்ள இடத்தில் டால்டன் குடும்பத்தினா் தங்களது காா்களை நிறுத்தி வைப்பது வழக்கமாம். இதுதொடா்பாக இருதரப்புக்குமிடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு வந்திருந்த செந்தில்குமாா் தனது வீட்டில் இருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுள்ளாா். அப்போது அவா்களது குடும்ப கோயில் அருகேயுள்ள இடத்தில் நிறுத்தியிருந்த காரை டால்டனின் மகன் நரேந்திரன் (27) வெளியே எடுத்தாராம். அப்போது அவருக்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை பாா்த்த நிக்கோலஸ் ராஜரத்தினம், டால்டன் ஆகியோா் சென்று தடுக்க முயன்றனராம்.

இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமாா், நிக்கோலஸ் ராஜரத்தினம், டால்டன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினராம். இந்த மோதலில் நரேந்திரன் மற்றும் செந்தில்குமாரும் காயமடைந்தனா்.

இதையடுத்து நான்கு பேரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டால்டன், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த நரேந்திரன் மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், துணை ஆணையா் சரவணன் உள்ளிட்டவா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, மணிப்புரம், வயல்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.