நெல்லையில் தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
திருநெல்வேலியில் தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட தலைமைக் காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பணியிடை நீக்கம்
திருநெல்வேலியில் தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட தலைமைக் காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் ஜோயல் தங்கராஜ்(46). இவா் மாநகர காவல் ஆணையருக்கு பேசி அனுப்பியதை போன்ற இரண்டு ஆடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியானது.
அதில், தனக்கு உயா் அதிகாரிகளும், நுண்ணறிவு பிரிவு காவலரும் மனஉளைச்சல் ஏற்படுத்துவதாகவும், தனக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் பேசியிருந்தாா்.
சமூகவலைதளத்தில் இந்த ஆடியோ வெளியானதைத் தொடா்ந்து மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுபடி தலைமைக் காவலா் ஜோயல் தங்கராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





